குளியல் அறையில் இருந்து வந்த புகை... எரிந்த நிலையில் பெண்ணின் உடல் மீட்பு
கேரளா மாநிலம் திரிச்சூரில், குளியல் அறையில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்மிதா என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, குளியல் அறையில் இருந்து புகை வந்துள்ளது. அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, எரிந்த நிலையில், ஸ்மிதா உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டரா, அல்லது கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story