பாராசெயிலிங்கில் பயணம் செய்த பெண் மற்றும் சிறுவர்கள்..படகில் இணைக்கப்பட்ட கயிறு அறுக்கப்பட்டு உயிரிழப்பு
(வாழ்க்கை என்பது ஒரு விலை மதிப்பு இல்லாதது. சில நேர சந்தோஷத்திற்காக அதனை தொலைத்து விட வேண்டாம். அப்படி இழந்தால் என்ன நடக்கும் என்பதை நானும் எனது குடுப்பத்தாரும் கண் எதிரிலேயே பார்த்து இன்னமும் அதனை அனுபவித்து கொண்டிருக்கிறோம்).. சந்தோஷமாக விடுமுறையை கழிக்க சென்ற ஒரு குடும்பத்தில் நொடி பொழுதில் தனது கண்முன்னே மனைவி இறப்பதைப் பார்த்த ஒரு கணவரின் பதிவு தான் இது.. மே 2022 ல் ஸ்ரீனி அலபர்த்தி தனது மனைவி சுப்ரஜா அலபர்த்தி மற்றும் அவருடைய மகன் மற்றும் உறவினர்களுடன் புளோரிடாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அப்போது ரிச்சர்ட் படகு நிறுவனத்திற்கு சொந்தமான பாரசெயிலிங்-ல் பயணம் செய்ய விரும்பியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக அந்த நிறுவனமும் அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. பயணம் மேற்கொள்ளும் முன்பே வானிலை சூழல், பாதுகாப்பு தொடர்பான அனைத்தையும் விசாரித்து நிறுவனம் உறுதி அளித்த பிறகே பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.. அதன்படி பாரசேயிலிங்கில்.... ஸ்ரீனி அலபர்த்தியின் மனைவியான சுபிரஜா ,அவரது 10 வயது மகன், 9 வயது உறவுக்கார சிறுவனும் போட்டுடன் (Boat) இணைக்கப்பட்ட உறுதியான கயிறு மற்றும் பாராசூட்டின் உதவியுடன் வானில் பறந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசி இருக்கிறது, இதனால் அவர்கள் பயணம் செய்த பாராசெயிலிங்கை காற்று அழுத்தியதால் பாராசெயிலிங் இணைக்கப்பட்ட படகின் திசை மாறி மாறி செல்லவே படகை இயக்கிய கேப்டன் டேனியல் கேவியன் என்பவரால் கட்டுபடுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் படகில் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை அவர் அறுத்துள்ளார்..
என்ன நடக்கிறது என்பது புரிவதற்குள்ளாகவே பல அடி உயரத்ததில் பறந்து கொண்டிருந்தவர்களின் பாராசெயிலிங்கானது இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த பழைய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சுப்ரஜா அலபர்த்தி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது மகன் படுகாயங்களுடன் மற்றொரு சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டனர். சற்றும் எதிர்பார்க்காத இந்தவிபத்துக்குப் பிறகு பாராசெய்லிங் நிறுவனத்திற்கு எதிராக அலபர்த்தி குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு தொடர்பாக பாராசெயிலை தனது படகுடன் இணைக்கும் கேபிளை வெட்டிய படகு கேப்டன் டேனியல் மீது மனிதப் படுகொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவம் நடந்த ஓர் ஆண்டுக்குப் பின் முதன் முறையாக விபத்தில் உயிரிழந்த சுப்ரஜா அலபர்த்தி இச்சம்பவம் குறித்து மனம் திறந்து இருக்கிறார் இந்த விபத்து நடப்பதைத் தடுக்க அவர்களுக்கு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவர்கள் அதை சரியாக கையாளவில்லை என்றும்.. சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நான் என் மனைவியை இழந்திருக்க மாட்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார். இவரின் இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.