தெலுங்கானா முதல்வரின் பெயரை பச்சைக் குத்திய பெண் அமைச்சர்
தெலுங்கானாவில், பெண் அமைச்சர் ஒருவர், முதல்வர் பெயரை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தின் 10-வது ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா பவனில் பழங்குடியினர் கலாச்சார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தெலுங்கானா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோட், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பெயரை, தனது கையில் பச்சைக்குத்தி, கட்சி மீதான தனது பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
Next Story