திருமணமான 1 வருடத்தில் பெண் மரணம்.. 2 கிமீ தூரம் ஸ்தம்பித்த போக்குவரத்து
சேலம் கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷிற்கும், தீபிகா என்ற பெண்ணுக்கும் இடையே, கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
மதுபோதைக்கு அடிமையான சுரேஷ், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு, அடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறின் போது, விரக்தி அடைந்த தீபிகா, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மகளின் இறப்பிற்கு காரணமான அவரது கணவர் சுரேஷை கைது செய்ய வலியுறுத்தி, தீபிகாவின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், சேலம் ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில், மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அந்தப் பகுதியே போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. பின்னர் போலீசார் நீண்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.