ரோட்டில் மகன், மகளுடன் கதறி அழுது தர்ணாவில் ஈடுபட்ட பெண் - கரூரில் பரபரப்பு

x

கரூரில் வீட்டை காலி செய்யுமாறு தொந்தரவு தருவதாக, தனது மகன் மற்றும் மகளுடன் தர்ணா போராட்டம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் அருகே திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த மேத்தா என்ற பெண், கணவரை இழந்த நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

வங்கி கடன் காரணமாக, மேத்தாவின் மாமியார் பெயரில் உள்ள வீடு மற்றும் கடையை அசோக்குமார் என்பவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அசோக்குமாருக்கு தனது மாமியார் சொத்தை விற்கவில்லை எனவும், தன்னையும் தனது குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்ற, அசோக்குமாரை வைத்து நாடகம் நடத்துவதாகவும் புகார் தெரிவித்தார்.

மேலும், வீட்டை விட்டு காலி செய்யுமாறு ஆட்களை வைத்து தொந்தரவு செய்வதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மேத்தா தெரிவித்தார்.

தனது மகன் மற்றும் மகளுடன் கதறி அழுதபடி தர்ணா போராட்டம் செய்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்