கடனால் தப்பியோடிய கணவன்..மனைவி தற்கொலை...சாகும் முன் உருக்கமாக பேசிய அதிர்ச்சி வீடியோ

x

விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில், தற்கொலைக்கு முன்பாக அந்த பெண் உருக்கமாக வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரக்காணம் அருகே மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தீபாவளிக்காக சீட்டு நடத்தியதில் அதிகப்படியான பணத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் வீட்டை விட்டு ஓடி தலைமறைவாகியிருக்கிறார். இந்நிலையில், இவரின் மனைவி மணிமேகலை தன் கணவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்காக, அருகில் உள்ள சீனிவாசன் என்பவரிடம் 5 லட்சம் ரூபாயை கடனாக பெற்று அனைவருக்கும் கொடுத்துள்ளார். இதையடுத்து நீண்ட நாள்களாகியும் கடனுக்கு வட்டி கட்டாததால் சீனிவாசனின் மனைவி மதி, பணத்தை திரும்ப தருமாறு மணிமேகலையிடம் கேட்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மதி தகாத வார்த்தைகளால் பேசியதால் மனமுடைந்த மணிமேகலை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முடிவுக்கு முன்பாக மணிமேகலை உருக்கமாக பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியான நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்