திருமணமாகி 13வது நாளில் பெண் தற்கொலை.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
வடசென்னையில் திருமணமாகி 13 நாட்களே ஆன பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ரேகா. இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை டி.நகரை சேர்ந்த ராஜசேகரன் என்பவருக்கும் கடந்த 14 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ரேகா கடந்த ஒரு வாரமாக தன்னுடைய தந்தை வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தந்தையின் வீட்டிலேயே ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story