ரூ.2000 நோட்டுகள் வாபஸ்.. பின்னணியில் நடந்த பல மாற்றங்கள்

x

2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 முதல் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட உள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

2016 நவம்பரில் பண நீக்க நடவடிக்கையின் போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது.

2017இல் மொத்தம் 328.5 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதன் மதிப்பு 6.57 லட்சம் கோடி ரூபாயாக, அனைத்து வகை நோட்டுகளின் மொத்த மதிப்பில் 50.2 சதவீதமாக இருந்தது.

2018இல் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 336.3 கோடியாக அதிகரித்தது. இதன் மதிப்பு 6.73 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

2019இல் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 329.1 கோடியாக சரிந்தது. இதன் மதிப்பு 6.58 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.

2020இல் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 274 கோடியாக சரிந்தது. இதன் மதிப்பு 5.48 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.

2021இல் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 245.1 கோடியாக சரிந்தது. இதன் மதிப்பு 4.9 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.

2022இல் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 214.2 கோடியாக மேலும் சரிந்தது. இதன் மதிப்பு 4.28 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.

2023இல் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 181 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதன் மதிப்பு 3.62 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டின் பங்கு 10.8 சதவீதமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்