"12 மணி நேர வேலை மசோதா வாபஸ்"... நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு
12 மணி நேர வேலை சட்ட மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெறுவதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை சின்ன போரூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பேசிய அவர், கடற்கரையை பொது சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன என்றும், பேனா நினைவு சின்னம் வைக்கக்கூடிய இடம் கடல் அல்ல என்றும் கூறினார். 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெறுவதை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
Next Story