அரியலூரில் புலிகள் நடமாட்டமா ? வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..
பெரியாத்துக்குறிச்சி கிராமத்தில் உள்ள அய்யனார் காடு பகுதியில், இரண்டு புலிகள் வந்ததாக, ஆண்டிமடம் போலீசார், மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வயல்வெளிகளில் சில கால் தடங்கள் இருந்ததால், அவை புலியின் கால் தடமாக இருக்கலாம் என, வனத்துறை அதிகாரிகள் சந்தேகித்தனர். அது குறித்த ஆய்வின் முடிவில், அவை புலியின் கால் தடங்கள் இல்லை என தெரியவந்தது. எனினும், வேறு ஏதாவது விலங்குகளின் கால் தடமாக இருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story