எம்.எல்.ஏ பதவி தப்புமா? - உச்சக்கட்ட பரபரப்பில் தென்காசி

x

தென்காசி தொகுதி தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் இன்று மீண்டும் எண்ணப்படுகின்றன.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில், தென்காசி தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றிபெற்றார். அதேசமயம், 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளார் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்