"போலீசாரிடம் ஒப்படைக்கப்படும்.." - மெட்ரோ வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு

x

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை, உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை, இன்று முதல் அடுத்த மாதம் 28 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களை சமர்பித்து, வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்தி உரிமையாளர்கள் எடுத்து செல்லலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அவ்வாறு எடுத்து செல்லப்படாத வாகனங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்