படையெடுத்த யானை கூட்டம்...தரைமட்டமான டீ கடை - அதிர்ச்சியின் உச்சத்தில் ஊர்மக்கள்
கோவை மாவட்டம் வால்பாறையில் ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தாய்முடி எஸ்டேட் அருகே வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள், ஊருக்குள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. நள்ளிரவில் எஸ்டேட் பகுதியில் உலா வரும் காட்சிகள் குடியிருப்பு வாசிகளால் பகிரப்பட்ட நிலையில், ஞாயிறு அதிகாலையில் வெள்ளப்பாண்டி என்பவருக்கு சொந்தமான தேநீர் கடைக்குள் புகுந்து கடையை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளன
Next Story