புற்களை தின்று மகிழும் காட்டு யானைகள் | Nilagiri
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டு உள்ளது. சேரம்பாடி, டான்டீ, ஏலமன்னா, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சமீப நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்நிலையில், ஏலியாஸ் கடை பகுதியில், சாலை ஓரத்தில் உள்ள புற்களை யானைகள் ஆர்வத்துடன் தின்று மகிழ்ந்தன. மேக மூட்டமான சூழலில் யானைகளைக் கண்டறிவது கடினம் என்பதால், பாதுகாப்பாக இருக்குமாறு அப்பகுதி மக்களை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story