தம்பி பங்ஷனுக்கு போக கூடாதுன்னு சொன்ன கணவர்.. - ரயில் முன்பாய்ந்து உயிரை விட்ட அக்கா

x

சேலம் மாவட்டம் புதுநல்லா கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான நிலையில், இவரது மனைவி கோகிலாவை அவரது சகோதரர் புதிய பெயிண்ட் கடை திறப்பு விழாவிற்கு அழைத்து இருக்கிறார். மனைவி திறப்பு விழாவுக்கு செல்ல காசிவிஸ்வநாதன் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற கோகிலா ஓமலூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்