இந்த கரையில் மனைவி.. அந்த கரையில் காதலி.. கடலில் நீந்தியே 6 பிள்ளைகள் பெற்ற கணவன்.. மன்மதனுக்கு நடுக்கடலில் ஊக்கடித்த போலீஸ்
காதல் மனைவிகளோடு ஒன்றாக சேர்ந்து வாழ விரும்பிய ஒருவர் சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு வந்ததால் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல்லாம் பண்ணக்கூடாது என சினிமா பாட்டை கேட்டு வளந்த நமக்கு, நாடு விட்டு நாடு சட்டவிரோதமாக வந்த நபர் ஒருவர், பெண் ஒருவரை காதலித்து இரண்டாவதும் திருமணமும் செய்திருக்கிறார்...
இரு மனைவிகளும் இரு நாடுகளில் வசித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் சட்டவிரோதமாக அடிக்கடி கடல் வழியாக சென்று மனைவிகளையும் பார்த்து வந்த அவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்...
இலங்கையில் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது பாரிஸ். இவருக்கு பைகோன் பீவி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து 3 பிள்ளைகள் உள்ள நிலையில், பைகோன் பீவி இலங்கையில் வசித்து வந்துள்ளார்...
இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக கடல் வழியாக தமிழகம் வந்த முகமது பாரிஸை, முறையான ஆவணங்கள் ஏதுமின்றி வந்ததாக கூறி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...
இதன்பின் ஜாமினில் வெளியே வந்த முகமது பாரிஸ், கோவையை சேர்ந்த ரெஸ்மில்லா என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்...
இதில், அவரை இரண்டாவதாக மணமுடித்துக் கொண்ட முகமது பாரிஸிக்கும், ரெஸ்மில்லாவுக்கும் 3 குழந்தைகள் பிறந்துள்ளனர்...
இந்நிலையில், தொடர்ந்து திருட்டு, வழிப்பறி என பொதுமக்களிடம் கைவரிசை காட்டி பணம் சம்பாதித்த முகமது பாரிஸ், அதன்மூலம், சட்டவிரோதமாக அடிக்கடி இலங்கை சென்று இரு மனைவிகளையும், 6 குழந்தைகளையும் கவனித்து வந்திருக்கிறார்...
இதில், ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக சென்று வருவதை முகமது பாரிஸ் வழக்கமாக கொண்டிருக்கிறார்...
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பல திருட்டு வழக்குகளில் சிக்கிய முகமது பாரிஸை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்...
இதில், ஜாமினில் வெளியே வந்த முகமது பாரிஸ் 2 மனைவிகளுடனும் சேர்ந்து ஒன்றாக ஒரே நாட்டில் வாழ திட்டமிட்டிருக்கிறார்...
இதற்காக இரண்டாவது மனைவி ரெஸ்மில்லாவை முறையாக பாஸ்போர்ட் எடுத்து இலங்கை அனுப்பி வைத்த அவர், வழக்கம்போல கடல் வழியாக தப்பி இலங்கைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்...
இதற்காக முகமது பாரிஸ் ராமேஸ்வரம் வந்த நிலையில், இந்த தகவல் க்யூ போலீசாருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது...
உடனே, ராமேஸ்வரம் கடற்கரையை சுற்றி வளைத்த க்யூ பிரிவு போலீசார், முகமது பாரிஸை மடக்கி பிடித்து கைது செய்தனர்..https://youtu.be/vvZ8nH6x5dQ
திருமணமான மனைவியுடனும், காதல் மனைவியுடனும் ஒன்றாக ஒரே நாட்டில் வாழ விரும்பி, காதல் மனைவியை விமானம் மூலம் அனுப்பி வைத்த கணவன், தானும் தப்பி செல்ல முயன்ற போது போலீசில் சிக்கிய நிலையில், கீயூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...