மதுபோதையில் துன்புறுத்திய கணவன்...இரும்பு குழாயால் மர்ம உறுப்பில் அடித்து கொன்ற மனைவி
வத்தலகுண்டு அருகே தெற்கு விராலிப்பட்டி பகுதியை சேர்ந்த வீரய்யன் - அபிராமி தம்பதிக்கு, 3 பிள்ளைகள் உள்ளன. தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான வீரய்யன், மனைவி அபிராமியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட வீரய்யனை, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அபிராமி, இரும்புக் குழாயால் அவரது மர்ம உறுப்பில் குத்தியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த வீரய்யன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அபிராமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story