தாய் வீட்டிலிருந்தே கணவனை தற்கொலைக்கு தூண்டிய மனைவி கைது
கோவை அருகே, கணவரை தற்கொலைக்கு தூண்டிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ராமநாதபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த அக்ஷய்க்கும், ஈரோடு பகுதியை சேர்ந்த அனுதர்ஷினி என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது. ஆனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அனுதர்ஷினி கல்லூரியில் படித்து வந்ததால், ஈரோட்டில் உள்ள தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், விரக்தியில் அக்ஷய் தற்கொலை செய்து கொண்டார். தனது மகன் தற்கொலைக்கு காரணம் அனுதர்ஷினிதான் என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக அனுதர்ஷினி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story