மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கணவனும் உயிரிழந்த சம்பவம் - அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது

x

சிதம்பரம் புறவழிச்சாலையில் உரக்கடை வைத்திருந்தவர் கணேஷ். இவர் கடந்த 24ம் தேதி தனது மனைவி, மகன் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு உயிரிழந்தார்.

விஷம் கொடுக்கப்பட்ட 3 பேரும் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் மகள் சுமித்ரா சமீபத்தில் உயிரிழந்தார்.

கணேஷ் இறப்பதற்கு முன் பதிவு செய்த ஆடியோவில் "தன்னிடம் கடனுக்கு உரங்களை வாங்கிவிட்டு, திருப்பி தராதவர்களே என் முடிவுக்கு காரணம்" என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி 8 பேர் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்திருந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையை சேர்ந்த புகழ்நேசன் என்பவரை கைது செய்தது.

ஏற்கனவே இந்த வழக்கில் முதல் குற்றவாளியான அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் செங்குட்டுவன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்