"ஆளுநரால் பதவி நீக்கம் செய்ய முடியும் என்றால் தேர்தல் எதற்கு?" - முரசொலி நாளிதழ் விமர்சனம்

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கத்துக்குட்டி அரசியல் அத்துமீறிக்கொண்டு இருப்பதாக, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி விமர்சித்துள்ளது. இது தொடர்பான விமர்சனக் கட்டுரையில், அரசியல் சட்டத்தின் அரிச்சுவடியைக் கூட அறியாத ஒரு நபர், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளுநர் நினைத்தால் அமைச்சரை நீக்கலாம் என்றால், அதே நிலைதானே முதலமைச்சருக்கும் என்றும், நாட்டில் எதற்கு தேர்தலும் மக்கள் பிரதிநிதிகளும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. ஆளுநர் அமைச்சரை பதவி நீக்கம் செய்யலாம் என சட்டம் இருந்தால் பல்வேறு ஆட்சிகளை பாஜக கவிழ்த்து இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்