கவரிங் வைத்துவிட்டு தங்கத்தை ஆட்டைய போட நினைத்த கபுல்ஸ் - கையும் களவுமாக பிடித்த ஊழியர்கள்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள நகைக்கடைக்கு கணவன், மனைவி போல் வந்த ஜோடி, தங்க மோதிரம் வாங்குவதுபோல் நடித்துள்ளனர்.
அப்போது கடை ஊழியர், தங்க மோதிரங்கள் அடங்கிய ட்ரேவை அந்த ஜோடியிடம் காட்டியுள்ளார்.
அவற்றை பார்ப்பது போல் பாவனை செய்த ஜோடி, ட்ரேவில் கவரிங் மோதிரத்தை வைத்து விட்டு, தங்க மோதிரத்தை எடுத்து செல்ல முயன்றுள்ளது.
இதனை கவனித்த கடை ஊழியர்கள், இருவரையும் கையும், களவுமாக பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், கெளதம், மேனகா என்ற இருவரும், கணவன், மனைவி போல் நடித்து, இதேபோல் பல்வேறு நகைக்கடைகளில் திருடியிருப்பது தெரியவந்துள்ளது.
Next Story