தேவர் தங்க கவசம் யார் அணிவிக்க வேண்டும்? - உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு | Thevar Jayanthi

x

தங்க கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை எடப்பாடி தரப்பிற்கு வழங்க கோரி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக மதுரை மாவட்ட வருவாய் அலுவலருக்கு அதிகாரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கள் பொறுப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து சென்று அணிவித்து, மீண்டும் வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என மதுரைக்கிளை தமது உத்தரவில் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவசத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவு இந்த ஆண்டிற்கு மட்டுமே எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார். காலதாமதம் ஏற்படும் காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு பதிலாக மதுரை மாவட்ட நிர்வாகம் தங்க கவசத்தை பெற்று செல்ல உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்