யாருக்கு சொந்தமான இடம்..? கொடூரமாக தாக்கிக்கொண்ட வெளிநாட்டினர்,உள்ளூர் வாசிகள் - விழுப்புரத்தில் பரபரப்பு
யாருக்கு சொந்தமான இடம்..? கொடூரமாக தாக்கிக்கொண்ட வெளிநாட்டினர்,உள்ளூர் வாசிகள் - விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில் இங்கு பல்வேறு நாட்டில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர் இங்கு ஆரோவில் ஃபவுண்டேஷன் சொந்தமாக பல நூறு ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது மேலும் அதன் அருகிலும் பல ஏக்கர்கள் தரிசு நிலம் தனியாருக்கு சொந்தமாக வும் உள்ளது இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார் அந்த இடம் ஆரோவில் லுக்கு சொந்தம் என சில ஆரோவில் வாசிகள் ( வெளிநாட்டினர்) கூறி வந்தனர் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது உடனே போலீசார் சென்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் மேலும் வெளிநாட்டினர் ஆரோவில் வாசிகள் நீதிமன்றத்திற்கு சென்று தடை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர் அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆரோவில் பக்கம் போதிய ஆதராம் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இன்று தனியார்க்கு சொந்தமான இடம் என அவரது தரப்பினர் வேலி அமைக்க முற்பட்ட போது 100 மேற்பட்ட வெளிநாட்டினர் முற்றுகையில் ஈடுபட்டனர் இதனால் தனியார் இட உரிமையாளர் தரப்புக்கும் ஆரோவில் வாசிகளுக்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது இதனால் ஆரோவில் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது பதற்றத்தை தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளன