உண்மையான சிவசேனை யாா்? தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

x

உண்மையான சிவசேனையாக அறிவிக்கக் கோரிய ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரித்தது.

உத்தவ் தாக்ரே அணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி உண்மையான சிவசேனையாக அறிவிக்கக் கோரி ஏக்நாத் ஷிண்டே எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கௌல், அரசியல் கட்சிகள் தொடர்புடைய அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமுண்டு என வாதிட்டார்.

அனைத்து கரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், உண்மையான சிவசேனையாக அறிவிக்கக் கோரிய ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளித்தனர்.

அத்துடன் உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனுவை கள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்