தடுப்பூசி செலுத்தியவர்கள் யார்?... லீக்கான டேட்டா.. டெலிகிராமில் கசிந்த ஆதார், செல்போன் எண்கள் - இனிமேல் என்னவாகும்..?

x

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை கோவின் இணையதளம் ஒருங்கிணைத்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களது ஆதார் எண்ணைக் கொண்டு, இந்த தளத்தில் முன்பதிவு செய்து, தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளமான டெலிகிராம் பாட்-ல், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபலங்கள் உள்ளிட்டோரின் விவரம்​கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த செய்தியை கேரளாவை சேர்ந்த மலையாள ஆன்லைன் செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், டிஜிட்டல் இந்தியா கோளாறு அடைந்திருப்பதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரம் பொதுவெளியில் கிடைக்கப்பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தனது விவரங்களும் கசிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. 2021 ம் ஆண்டும் இதே போல கோவின் தளத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆதார் உள்ளிட்ட தனிநபர் விபரங்கள் வெளியானதாக புகார் எழுந்த நிலையில் அப்போது இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், கோவின் இணையதளத்தில் இருந்து எந்த தகவல்களும் கசியவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்