"எங்கள் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய நீ யார்?" - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்கள்

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கேள்வி எழுப்பி, சேலத்தில் தி.மு.க.வினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். எங்கள் அமைச்சரை நீக்க ஆளுநர் யார் என கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க.வினர், மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களுடன், அவர்கள் மீதுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளனர். குற்ற வழக்குகளை சுமந்து கொண்டிருக்கும் இவர்களை பதவி நீக்கம் செய்யச் சொல்லி, டெல்லிக்கு கடிதம் எழுதுவீர்களா? என்றும் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்