எந்தெந்த படிப்புகள் என்னென்ன படிப்புகளுக்கு சமமானது அல்ல? - உயர் கல்வித்துறை விளக்கம்
வேலை வாய்ப்பு அடிப்படையில், எந்தெந்த படிப்புகள் என்னென்ன படிப்புகளுக்கு இணையானது அல்ல? என்பது குறித்து உயர் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் கணினி படிப்பு, பிகாம் படிப்புக்கு இணையானது அல்ல எனவும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. கூட்டுறவு படிப்பு, எம்.காம் படிப்புக்கு சமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்.சி., பயன்பாடு கணிதம் படிப்பு, எம்.எஸ்.சி., கணிதம் படிப்புக்கு இணையானது அல்ல என, குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்.சி., சுற்றுச்சூழலியல் படிப்பு, எம்.எஸ்.சி., நுண்ணுயிரியல் படிப்புக்கு சமமானது கிடையாது எனவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.லிட் படிப்பு பி.ஏ. தமிழ் படிப்புக்கு இணையாது அல்ல எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்.சி., நுண்ணுயிரியல் படிப்பு, பி.எஸ்.சி., விலங்கியல் படிப்புக்கு இணையானது அல்ல என, குறிப்பிடப்பட்டுள்ளது.