ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்கும் முறை எப்போது ஆரம்பம்? - சென்னை மக்களுக்கு சூப்பர் செய்தி..!

x

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே இ-டிக்கெட் முறை, அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என சென்னை பெருநகர போக்குவரத்துக் குழுமம் தெரிவித்துள்ளது.

-மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையத்துடன், சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரே பயணச்சீட்டு முறைக்கென தனி செயலி உருவாக்குவது குறித்து பேசப்படுவதாக தெரிகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும், ஒரே இ-டிக்கெட் முறையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர விரயம், அலைச்சல், பயணத்தில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்