மாணவி ஸ்ரீமதியின் உடல் எங்கு தகனம் செய்யப்படவுள்ளது?
வேப்பூர் அருகே கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் தகனம் செய்யப்படவுள்ள கிராமத்தில், போலீசார் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல், வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி அக்கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிராம நுழைவு வாயிலில் தடுப்பு வேலி அமைத்துள்ள போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளியூரை சேர்ந்தவர்களுக்கு கிராமத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாணவியின் உடல் தகனம் செய்யப்படவுள்ள இடத்தை ஏற்கனவே ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story