"நான் குஜராத் முதல்வர் ஆனதும்..." - பழைய நினைவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

x

குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்வாகத் என்னும் திட்டத்தின் 20 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.

அப்போது உரையாற்றிய பிரதமர், எந்த நோக்கத்திற்காக சுவாகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அவை நிறைவேற்றப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இதன் மூலம் தங்களின் பிரச்சனைகள் மற்றும் கவலைகள் குறித்து மக்கள் குரல் எழுப்புவதோடு அதற்கு தீர்வுகளையும் காண்பதாக குறிப்பிட்டார்.

குஜராத் முதல்வரான உடன் யாராக இருந்தாலும் மாறிவிடுவார்கள் என பலர் கூறியதாகவும் ஆனால் தாம் ஒரு போதும் மாறி விட கூடாது என முடிவு செய்ததாக குறிப்பிட்டார். முதல்வர் நாற்காலியை பெற்றவுடன் மக்களில் ஒருவனாகவே தொடர்ந்து இருப்பேன் எனவும் ஒருபோதும் நாற்காலிக்கு அடிமையாகி விடமாட்டேன் என முடிவு செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்