ஆ.ராசா பற்றி கேள்வி எழுப்பியதும்..கை எடுத்து கும்பிட்டு கிளம்பிய அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு,
திமுக எம்.பி. தயாநிதி மாறன் கலந்து கொண்டனர். மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் சேகர் பாபு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபுவிடம் இந்து மதம் குறித்து ஆ ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளிக்காமல் அமைச்சர் சேகர்பாபு கைகூப்பியபடி சென்றுவிட்டார்.
Next Story