பாஜகவில் ஆடியோ, வீடியோ கலாச்சாரம் வந்தது எப்போது? - நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு பதிவு

x

ஹனிடிராப்பின் பண்டோரா பெட்டியை சூர்யா சிவா திறந்ததாகவும், இதுகுறித்து போலீசார் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பாஜக நிர்வாகியான சூர்யா சிவாவின் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சூர்யா சிவா, நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே நடிகை காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா சிவா ஹனிடிராப் பண்டோரா பெட்டியை திறந்ததாகவும், இதுகுறித்த தனியார் தொலைக்காட்சி பேட்டியை பார்த்ததாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என்பதால் போலீசார் இதுகுறித்து உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவில் அண்ணாமலையும், மதனும் சேர்ந்த பிறகே ஆடியோ, வீடியோ கலாச்சாரம் வெளிவந்ததாகவும் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்