ரூ.2,000 நோட்டுகளை எப்போது மாற்றலாம்.? - வங்கிகள் என்னென்ன வசதி செய்ய வேண்டும்.?

x

2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் தொடங்குகிறது.2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப‌ப் பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, இன்று

23ஆம் தேதியில் இருந்து வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப‌ப் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த‌ தாஸ் வெளியிட்டார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, நிழலுக்கு பந்தல், இருக்கை வசதிகளை செய்துத் தரவேண்டும் எனவும். ஒவ்வொரு நாளும் எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டன? எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டன? என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். இன்னும் 4 மாத கால அவகாசம் இருப்பதால், பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நாட்களில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளுமாறும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பின்னர், காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்