ரெய்டில் சிக்கிய பாப்புலர் பிரண்ட் அமைப்பின் ஆவணங்களில் இருந்தது என்ன 1
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசு தடை விதித்திருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகளில், 2 நாட்கள் மெகா ரெய்டு நடத்தப்பட்டது.
அமலாக்கப்பிரிவு, தேசிய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகள், மாநில போலீசார் நடத்திய ரெய்டில் 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சோதனையில் ஆட்சேபனைக்குரிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் சிக்கியது தொடர்பாக விசாரணை முகமைகள் வழங்கிய அறிக்கையில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி...? என்பதை விளக்கும் ஆவணம் அந்த அமைப்பை சேர்ந்தவரின் வீட்டில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story