நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன? - நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்
கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் சஞ்சய் ஜா மற்றும் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், கூம்டி நிலையத்தில் வடக்கு சிக்னலில் உள்ள சிக்னலிங் சர்க்யூட் மற்றும் மின்சார தூக்கும் தடையை மாற்றுவதற்கான சிக்னலிங் பணியின் போது ஏற்பட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டியதாக கூறியுள்ளார்.
இந்த பிழைகள் தவறான கிரீன் சிக் சமிக்ஞை காட்டப்படுவதற்கு வழிவகுத்ததோடு அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் ரயில் மோதியது என தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்த 41 பயணிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Story