"என்ன தவம் செய்தேனோ..!" - பிறந்த நாளில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ் - காரணம் என்ன..?

x

தனது பிறந்த நாளை ஒட்டி சொந்த கிராமத்தில் முதல் முறையாக பாமக கொடியை ஏற்றிய ராமதாஸ், கண்ணீர் மல்க கவிதை வாசித்து தொண்டர்களை நெகிழ்ச்சி அடைய செய்தார். பாஜக நிறுவனர் ராமதாஸ் தனது 84 வது பிறந்த நாளை அவரது சொந்த கிராமமான கீழ்சிவிரியில் கொண்டாடினார். கிராமத்தில் உள்ள 84 அடி உயர கம்பத்தில் பாமக கட்சியை கொடியை ஏற்றிய அவர், தனது இல்லத்திற்கு சென்று பெற்றோரின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தார். பின்னர் கிராம மக்களிடம் உரையாற்றிய அவர், என்ன தவம் செய்தேனோ இம்மண்ணில் பிறக்க, என கவிதை வாசித்து கண்ணீர் விட்டார்.


Next Story

மேலும் செய்திகள்