ஆருத்ரா நிதி மோசடிக்கும் ஆர்.கே.சுரேஷுக்கும் என்ன தொடர்பு?போலீசார் நேரில் வரச்சொல்வதன் காரணம் என்ன?
- சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் 37 கிளை நிறுவனங்களாக வேரூன்றியது ஆருத்ரா நிதி நிறுவனம்...
- நிதி நிறுவனத்திற்கே உரிய பாணியில் வாடிக்கையாளர்கள் பணம் முதலீடு செய்தால் அதிகளவில் வட்டியென பிரம்மாண்டமாக விளம்பரம் செய்துள்ளனர்...
- அரசு ஊழியர்கள் மற்றும் செல்வந்தர்களில் ஆரம்பித்து சாமானிய மக்கள் வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோரின் 2438 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது...
- இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆருத்ரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அதில் பணிபுரிந்து வந்த முக்கியஸ்தர்களின் அலுவலகங்கள், வீடுகள் என 57 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்...
- ஆருத்ரா நிதி நிறுவனம், ஆருத்ரா கோல்டு மற்றும் கிளை நிறுவனங்களில் உரிமையாளராக செயல்பட்டு வந்த 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவும் செய்தனர்...
- இதில், 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவானவர்களை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், சுமார் பத்துமாத தேடலுக்கு பின்பு முன்னாள் பாஜக நிர்வாகியான ஹரிஸ் என்பவரையும், நிறுவனத்தின் பெண் நிர்வாகி ஒருவரையும் கைது செய்த பின் வழக்கு வேகமெடுத்தது...
- இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரில் ரூசோ என்பவரை போலீஸ் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்... இந்த விசாரணையில் தான் வழக்கின் அடுத்த கட்டமும், முக்கிய புள்ளி ஒருவரும் மோசடியில் தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது ...
- அதாவது, ஆருத்ரா நிறுவனத்தின் மோசடி தோலுரிக்கப்பட்டு, ருத்ரதாண்டவம் எடுத்த போது, ஆருத்ராவின் முக்கிய நிர்வாகியான ரூசோ பயத்தால் பதற ஆரம்பித்துள்ளார்...
- அப்போது, இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் பாஜக மாநில விளையாட்டு செயலாளரான ஹரிஷின் மூலம் நடிகரும் பாஜக கலைப்பிரிவு நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷை தொடர்பு கொண்டுள்ளனர்..
- தங்களை காப்பாற்றுவதற்கு சுமார் 12 கோடி ரூபாய் பணம் ஆர்.கே. சுரேஷூக்கு கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது....
- இது தொடர்பாக நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷூக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்... இந்த நிலையில், ஆர்.கே. சுரேஷ் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது...
- இதில், ஆருத்ரா நிர்வாகி ரூசோ கைது செய்யப்பட்டபோதே அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாகவும் வெளியான தகவல் மேலும் சூடுபிடித்தது....
- இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் தரக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டனர்..
- இதில், நடிகர் ஆர்.கே. சுரேஷ் ஆஜராகாமல் அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில், நடிகர்ஆர்.கே. சுரேஷூக்கும், ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக்கும் தொடர்பில்லை எனவும், இந்த விவகாரத்தில் ஆர்.கே. சுரேஷ் பணம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு போலியானது என கூறி விளக்கமளித்துள்ளார்...
- ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த போலீசார், வெளிநாட்டில் இருக்கும் நடிகர் ஆர்.கே. சுரேஷை நேரில் ஆஜராகும் படி தெரிவித்த நிலையில், அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது....
- அதேநேரம் ஹிஜாவு உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது...
Next Story