பனிப்பாறை போல் வந்த வினோதம்.. குடலை புரட்டும் துர்நாற்றம் - ஓசூர் அணையில் என்ன நடக்கிறது?

x

கெலவரப்பள்ளி அணையிலிருந்து துர்நாற்றத்தோடு குவியல் குவியலாக வெளியேறும் இரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி

ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான இரசாயன கழிவுநீர் நீர் துர்நாற்றம் வீசி குவியல் குவியலாக நுரைப்பொங்கி காட்சியளிக்கிறது

கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பதியாகும் தென்பெண்ணை ஆறு, அங்குள்ள வரத்தூர் ஏரி வழியாக பெங்களூர் பெருநகரத்தின் கழிவுநீர் கலந்தும் தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுநீர் கலந்து தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது

இன்று காலை தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீர் துர்நாற்றம் வீசி குவியல் குவியலாக இரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது. கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்றைய அளவான 410 கன அடி நீராகவே இருந்தாலும் நுரையின் அளவு அதிகரித்துள்ளது.. வரத்தாக உள்ள 410 கன அடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது

நாளுக்குநாள் அணைப்பகுதிகளில் அதிகரித்து வரும் இரசாயன நுரைகளால் ஒசூர் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்