"மணிப்பூரில் நடந்தது பாலியல் வன்கொடுமை அல்ல, பாலியல் பயங்கரவாதம்" - பூங்கோதை கடும் கண்டனம்
மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைக்கு திமுக மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது முகநூலில் வெளியிட்ட வீடியோவில், மணிப்பூரில் நடந்தது பாலியல் வன்கொடுமை அல்ல பாலியல் பயங்கரவாதம் என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு சாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்துகிறது எனவும், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story