நாடாளுமன்றத்தின் சிறப்புக்கள் என்ன..?உள்ளே இவ்ளோ வசதிகள் இருக்கா..! செலவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..

x

பிரதமர் மோடி திறந்து வைக்கும் புதிய நாடாளுமன்றத்தில் இருக்கும் சிறப்புகள் என்ன...? என்பதை இப்போது பார்க்கலாம்...

பிரமாண்டமாக காட்சியளிக்கும் முக்கோண வடிவிலான நாடாளுமன்றம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இதன் கட்டுமான செலவு 970 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. பசுமை நாடாளுமன்றமாக காட்சியளிக்கும் புதிய நாடாளுமன்றம் சூரிய மின்சக்தி கட்டமைப்பை கொண்டுள்ளது.

4 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் மக்களவை வளாகம் பிரமாண்ட வரவேற்பு ஹாலை கொண்டிருக்கிறது (1:17 வது நிமிடம்).

உள்ளே சென்றால் 888 உறுப்பினர்கள் அமரும் வகையிலான மக்களவை தேசியப் பறவையான மயில் மாதிரியை பிரதிபலிக்கிறது. இதுவே பழைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் மட்டுமே அமர முடியும்...

அதே போல், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை வடிவில் காட்சியளிக்கிறது. இப்போதைய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் 250 பேர் மட்டுமே அமரலாம் என்ற நிலையில், புதிய நாடாளுமன்ற மக்களவையில் 300 பேர் அமரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மக்களவையிலேயே இரு அவை உறுப்பினர்களும் அதாவது ஆயிரத்து 272 உறுப்பினர்களும் அமரும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மைய தோட்டத்தில் இந்திய தேசிய மரமான ஆலமரம் இருக்கிறது.

பார்வையாளர் மாடமும் பிரமாண்டமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. மக்களவை பணியாளர்கள், ஆலோசனை கூட்டங்களுக்கு என பிரத்யேக அறைகள் விஸ்தாரமாக அமைக்கப்பட்டுள்ளது.

மக்களே நாட்டின் அரசன் என்பதை பிரதிபலிக்கும் வகையில் புதியநாடாளுமன்ற அரசியலமைப்பு மையத்தில், இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சட்ட பிரதி காட்சியகப்படுத்தப்பட இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைப்பொருட்கள், அலங்கார ஓவியங்கள், சிற்பங்கள் காட்சியகப்படுத்தப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அலுவலகங்கள் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதியை கொண்டிருக்கிறது. மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பேச்சின் மொழிப்பெயர்பை கேட்கவும், குரல் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவும் மைக், ஸ்பீக்கர் வசதி நவீனத்துடன் செய்யப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மரச்சட்ட வேலைபாடுகள் விரிவாக செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தின் தளங்களில் உத்திரபிரதேச மாநிலம் பதோஹியில் கையால் உருவாக்கப்படும் கம்பளங்கள் விரிக்கப்பட உள்ளது.

நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்றாக விளங்கும் தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதினம் வழங்கிய ரிஷப சின்னம் பொறித்த செங்கோல் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்