50 முதல் 70 லட்சம் வரை ...ஜீப் மாடலில் 5 புதிய வாகனங்கள் சிறப்பம்சங்கள் என்ன ?
செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரமமான, கரடுமுரடான பகுதிகளை கடக்கும், அதிக திறன், புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான டயர்கள் பொருத்தப்பட்ட 5 புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஜீப் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார்கள் 50 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் பலரும் இந்த வாகனங்களின் கண்காட்சியை பார்வையிட்டு, அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி. ஜாபர்சேட் உள்ளிட்ட பலர் இந்த அறிமுக விழாவில் பங்கேற்றனர்.
Next Story