மகளின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தந்தை செய்த பகீர் காரியம் - குமரியில் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகள் இறந்த துக்கம் தாளாமல் முதலாம் ஆண்டு நினைவு நாளில் திமுக கவுன்சிலரான தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரணியல் அருகே தெக்கன்தெருவிளை பகுதியை சேர்ந்த பழனிகுமார் கக்கோட்டுத்தலை ஊராட்சி 2 வார்டு கவுன்சிலர் ஆவார். இவரது மகள் ஆஷிகா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்துள்ளார்... கடும் மன உளைச்சலில் இருந்த பழனிகுமார் இறந்த மகளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story