களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம், களமிறங்கிய போதை கும்மல் - சிக்கிய பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விற்பனை செய்வதற்கு எடுத்து செல்லப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புத்தாண்டை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கஞ்சா, கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதை பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது. சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை கைது செய்த போலீசார், அதில் இருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.
Next Story