காவல் அருங்காட்சியகத்தில் களைகட்டிய உணவு திருவிழா | Chennai
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில், காவல்துறை சார்பில் உணவுத் திருவிழா நடைபெற்றது. சென்னை காவல் தலைமையிட இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த திருவிழாவில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சமையல் கலை நிபுணர் தாமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உணவு திருவிழாவில், தமிழக பாரம்பரிய உணவு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநில உணவு வகைகளும் இடம்பெற்றிருந்தன. பொதுமக்கள் அருங்காட்சியகத்தை கண்டுகளிக்கவும், உணவு திருவிழாவில் உண்டு மகிழவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், உணவு திருவிழாவில் பங்கேற்ற காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உடன் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story