அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி... அழகு சாதன பெட்டியில் ஆணுறை.. - அதிர்ச்சியில் உறைந்த மணப்பெண்கள்

x

மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில், மாநில அரசின் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கான திருமண திட்டத்தின் கீழ், 296 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண்களுக்கு வழங்கப்பட்ட அழகு சாதன பெட்டிகளில், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்டவை இருந்துள்ளன. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அழகு சாதனை பெட்டிகளில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்