"அரசியல்வாதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள மாட்டோம்" - வருவாய் அலுவலர்கள் சங்கத் தலைவர்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அவர்களை சமாதானம் செய்ய முயன்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை எம்.பி.யின் ஆதரவாளர் கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Next Story