"உடனடியாக லோன் தருகிறோம்.."லோன் செயலிகளுக்கு சீனாவுடன் தொடர்பு..அதிர்ச்சி கொடுத்த சைபர் கிரைம்

x

உடனடியாக லோன் தருவதாக கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பலுக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாகவும், கிரிப்டோ கரன்சி மூலம் சீனாவிற்கு பணம் அனுப்பப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் டெல்லி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மொபைல் செயலிகள் உடனடியாக லோன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாகவும், புகைப்படங்களை தவறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. பாதிக்கபட்ட சிலர் தற்கொலை செய்து கொண்டதால் மோசடி செயலிகள் குறித்த உளவுத்துறை ஆய்வில் டெல்லி சிறப்புப்படை போலீசார் ஈடுபட்டனர். அதில், இந்தியாவில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட லோன் செயலிகள் சீனா மற்றும் ஹாங்காங் சர்வர்களுடன் தொடர்புடையது என்றும், முக்கியமாக அலிபாபா நிறுவனத்தின் சர்வர் மூலம் இயங்குவதாக டெல்லி டிசிபி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். 2 மாதங்களான டெல்லி, அரியானா, கர்நாடாக, மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 22 பேரை கைது செய்துள்ளதாகவும், அதில் 6 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மொபைல் செயலி மூலம் லோன் வழங்குவதாக கூறி பயனாளர்களை கட்டாயப்படுத்துவதுடன், அவர்களின் தகவல்களை சேகரித்து மிரட்டல் விடுவதாகவும், மோசடி மூலம் பெறும் பணம் ஹவாலா மற்றும் கிரிப்டோ கரன்சியான சீனாவிற்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலின் லோன் செயலிகளையும் டெல்லி போலீசார் பட்டியலிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்