"இதை எதிர்பார்த்தோம் ஆனால்..." - காங் தலைவர் டி.கே சிவக்குமார் பேட்டி
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கோயிலில் வழிபாடு நடத்தினார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் 140 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், 135 இடங்கள் கிடைத்துள்ளதாகவும், மக்களின் தீர்ப்பை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் டி.கே.சிவக்குமார் உள்ள நிலையில், தும்கூர் மாவட்டம் துருவகரேவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அட்சயா கோயிலில் வழிபாடு நடத்தினார். டி.கே.சிவக்குமார் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது இல்லம் அருகே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சிவக்குமாருக்கு உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். தொண்டர்கள் மலர்கொத்து மற்றும் மாலைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.