"நாங்க ஒரு தப்புமே பண்ணல" ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதால் நடுத்தெருவில் நிற்கும் குடும்பம்...கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு

x

ஊர் பணத்தை திருடி விட்டதாக கூறி, குடும்பத்தை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி, இரண்டு குழந்தைகளுடன் கணவன் மனைவி,, கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் சுந்தர நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த மரிய ராஜா மணிக்கு, பரமேஸ்வரி என்ற மனைவியும் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மரிய ராஜா மணி சுந்தர நாச்சியாபுரம் கிராமத்தில் ஊர் சங்கத்தில் பொருளாளராக பதவி வகித்து வந்து உள்ளார். அவர் ஊர் பணத்தை திருடி விட்டதாக கூறி, குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்