"அதை நாங்கள் நம்பத் தயாராக இல்லை" - திமுக எம்.பி டி.ஆர்.பாலு

x

நாடாளுமன்ற கூட்டத் தொடர், இன்று தொடங்க உள்ள நிலையில், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில், திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள், மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம், தமிழக ஆளுநரை திரும்பப் பெறுவது, மணிப்பூர் கலவரம், விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கு நோட்டீஸ் அளித்துள்ளதாக கூறினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்